செந்தமிழ்சிற்பிகள்

இராஜா அண்ணாமலையார் (1881 - 1948)

இராஜா அண்ணாமலையார் (1881 - 1948)

அண்ணாமலை செட்டியார் என்பவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றின் அமைப்பாளர் ஆவார். தமிழிசையை ஆய்வு செய்ய 1941 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு இவர் வழங்கிய நிதிப் பங்களிப்பு, தமிழிசை இயக்கத்துக்கு ஒரு உந்துதலாக அமைந்தது. சென்னை மாகாண முதல் சட்டசபைக்கு நேரடி தேர்தலில் 1921 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராவார்.

செட்டி நாட்டு அரசர் சர் ராஜா அண்ணாமலை செட்டியார் வாழ்க்கை - ஆண் மூலம் அரசாளும் என்பார்கள். மூல நட்சத்திரத்தில் (30-9-1881) பிறந்த அண்ணாமலை செட்டியார் தமிழ் இசைக்காக தமிழ் மொழிக்காக உழைத்த உத்தமர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினை நிறுவி பலருக்குக் கல்வியை வழங்கிய அண்ணாமலை செட்டியார் சிறந்த கொடை உள்ளம் படைத்தவர்.

ஈட்டலும், காத்தலும், வகுத்தலும் என்னும் மூன்று எழுத்தை தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்த அண்ணாமலை செட்டியாருக்கு தமிழ் இசை மீது இருந்த ஈடுபாட்டை கொண்டிருந்தார்.

அண்ணாமலை செட்டியார் எங்குச் சென்றாலும் திருக்குறள் நூலைத் தன்னுடனே எடுத்துச் செல்வாராம். திருக்குறளை மேற்கோள் காட்டியும் பேசுவாராம்.